வகைப்படுத்தப்படாத

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

(UDHAYAM, COLOMBO) – ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபை மற்றம் தேசிய லொத்தர் சபை என்பவற்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர், அமைச்சர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்துக்கு செல்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர், இதற்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் கீழ் நடத்தப்படவேண்டிய அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை என்பவற்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வருவது சட்டத்துக்கு புறப்பானது என, ஒன்றிணைந்த எதிரணியினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Related posts

மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்

அனர்த்த இழப்பீடு இன்று முதல்

Light showers expected in several areas today