வகைப்படுத்தப்படாத

உலகையே உலுக்கியுள்ள கொடூர சம்பவம் (காணொளி)

(UDHAYAM, COLOMBO) – மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கிராம மக்கள் சேர்ந்து கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில் தான் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது.

ஓடேரா பிபி (Otera Bibi) என்னும் 42 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோர்களுடன் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வழிதவறி பக்கத்து கிராமத்துக்குச் சென்றுவிட்டார் பிபி.  அங்கு அவரைக் கண்ட ஒருவர், குழந்தையை கடத்தும் பெண் என்று கிராம மக்களிடம் பரப்பிவிட்டார்.

கிராம மக்கள் பிபியைப் பிடித்து டிராக்டரில் கட்டிவைத்து அடித்துள்ளனர். பிபி வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். எதற்காக அடிக்கிறார்கள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எதையும் அறியும் சூழலில் பிபி இல்லை.

பிபியின் ஆடைகளை அப்புறப்படுத்தி, தலைமுடியை வெட்டி மனிதாபிமானமன்றி நடந்துகொண்டுள்ளனர் அந்த கிராமத்து ஆண்கள்.

தகவலறிந்த மூர்ஷிதாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிபியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பிபி இறந்துவிட்டார். அவரின் பெற்றோரை காவல்துறை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளது.

பெற்றோர்,  பிபியின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர்தான் பிபி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணை அடித்தவர்கள் மீதும், அவரை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபி அடித்துக் கொல்லப்பட்ட காட்சியை அங்கிருந்த ஒருவர் காணொளியாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, உலகளவில் அந்த காணொளி பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

[ot-video][/ot-video]

Related posts

புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

அமைச்சரவையின் அறிக்கை