விளையாட்டு

கிடைக்கப்பெற்றுள்ள தண்டனை புள்ளியுடன் நிரோஷன் திக்கவெல்ல அபாய நிலையில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தற்போது கிரிக்கட் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை காரணமாக 7 தண்டனை புள்ளிகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கள் அந்த புள்ளி 8 ஆக அதிகரித்தால் அது தடை புள்ளி 4  ஆக கூடும் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பாப்வே அணியுடன் காலி மைதானத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணியின் வீரர் சொலமன் மயரை சட்ட விதிக்கு புறம்பாக ஸ்டெம் செய்ய முற்பட்டமை தொடர்பில் நிரோஷன் திக்வெல்லவிற்கு அவரின் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு தண்டனை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

நிரோஷன் திக்வெல்லவிற்கு எதிராக இந்த வருடத்தில் விதிக்கப்பட்டுள்ள 3 ஆவது அபராதம் இதுவாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற போட்டியில் ரபாடவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு போட்டிகள் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் தண்டனை புள்ளி 7 ஆகவுள்ள நிலையில் இரண்டு வருடங்களுக்குள் 8 ஆக அதிகரித்தால் அது தடை புள்ளி 4 ஆக காணப்படும்.

இப்படியாயின் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியோ அல்லது ஒரு நாள் போட்டி இரண்டோ அல்லது இருபதுக்கு 20 போட்டி இரண்டோ தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரையிறுதியில் சாய்னா தோல்வி

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்

சொந்த மைதானத்தில் வீழ்ந்தது இலங்கை அணி [VIDEO]