வகைப்படுத்தப்படாத

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்?

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் தாக்கம் செலுத்தியுள்ள கணினி  மென்பொருள் தாக்கம் இலங்கையின் கணினிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்ரகுப்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது, கடந்த மாதமளவில் இடம்பெற்ற ரென்சம்வெயார் எனப்படும் கம்பம்கோரும் மென்பொருள் தாக்கத்துக்கு சமாந்தரமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மென்பொருள் தாக்கமானது, கணினிக்கு வரும் தகவல்களை பார்க்க முடியாதவாறு செய்துவிட்டு, பின்னர், அதை பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க கப்பமொன்றைக் கோரும்.

எனவே, இந்த மென்பொருள் தாக்கத்திற்கு உட்படாமலிருக்க, கணினிக்கு வரும் புதிய தகவல்களை திறந்து பார்க்கும்போது அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன், கணினியின் மென்பொருட்களை புதுப்பித்துக்கொள்வதனூடாக இந்த மென்பொருள் தாக்கத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.

Related posts

காலநிலையில் பாரிய மாற்றம்

Anjalika takes on Tania in Under 18 final

கண்டி-நவலபிடிய பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்