வகைப்படுத்தப்படாத

கண்டி தலதா மாளிகையின் எசெல பெரஹரா

(UDHAYAM, COLOMBO) – கண்டி தலதா மாளிகையின் எசெல பெரஹரா அடுத்த மாதம் 29ம் திகதி ஆரம்பமாகிறது.

தலதா மாளிகையை சூழவுள்ள நான்கு தேவாலயங்களில் 24ம் திகதி காலை 6.58க்கு முகூர்ந்தகால் நடப்படும் இதனைத்தொடாந்து  முதலாவது கும்பல் பெரஹர 29ம் திகதி வீதி உலா இடம்பெறும்.

பெரஹரா ஐந்து நாட்கள் நீடிக்கும். அதனைத் தொடர்ந்து ஒகஸ்ட் முதலாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹராவும், ஏழாம் திகதி இறுதி ரந்தோலி பெரஹராவும் இடம்பெறவுள்ளன. தலதா மாளிகையில் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தால தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

பெரஹராவை தரிசிக்க வரும் மக்களின் நலன்கருதி குடிநீர், மலசலகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் சந்தன தென்னக்கோன் கூறினார்.

இம்முறை பெரஹரா கடமைகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திர தெரிவித்தார்.

Related posts

Navy apprehends a person with heroin

12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Lotus Road closed due to protest