வகைப்படுத்தப்படாத

வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தின் போது உதவும்வகையில் இலங்கை கடற்படையினால் வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில் முதலாவது அனர்த்த நிலையப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த பிரிவில் நடமாடும் சமையலறை, சமையல் உபகரணங்கள் , கூடாரங்கள், நீர் பம்பிகள் கழிவறைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கு காணப்படுகின்றன.

குறித்த நிலையத்தினூடாக மேற்கு மற்றும் தென் மாகானங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தின் போது உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பல கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

இன்று உலக இசை தினம்

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் புதிய சட்டம்

ගත වූ පැය 24ක කාලය තුල බීමත් රියදුරන් 243 දෙනෙකු අත්අඩංගුවට