வகைப்படுத்தப்படாத

பளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை கிளி அரச அதிபர் திறந்து வைத்தார்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் இரண்டாவது நிர்வாகக்கட்டிடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இன்று  வெள்ளிக்கிழமை  திறந்து வைத்துள்ளார்.

மக்களுக்கான சேவையினை தடையின்றி வழங்கும் முகமாக பிரதேச செயலகங்களின் வளங்களை விருத்தி செய்யும் முகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பளை பிரதேச செயலகத்தில் மேற்படி அமைச்சின் நிதி உதவியுடன் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் இக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திரு இராசநாயகம் அவர்களும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக உத்தியோத்தர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

Serkis, Knight, Wyatt up for “Venom 2”

Anglican Church Head to visit Sri Lanka

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…