விளையாட்டு

இனி இப்படி யாரும் பேசமாட்டார்கள் – பாகிஸ்தான் அணி தலைவர் அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து, பாகிஸ்தான் தலைவர், சர்பராஸ் அகமது கூறும்போது, ‘இந்த வெற்றி இன்று, நாளை மட்டுமல்ல, பல காலம் நினைக்கப்படும்.

இனி, உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என யாரும் பேசமாட்டார்கள்.

இந்தப் போட்டிக்கு நாங்கள் வரும்போது 8-வது இடத்தில் இருந்தோம்.

இப்போது சாம்பியன்ஸ் ஆகியிருக்கிறோம்.

இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும்.

இந்தப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு இதுதான் முதல் பெரிய போட்டி. நாங்கள் வெல்வோம் என்று பலருக்கு நம்பிக்கையே இல்லைஎன்றார்.

இந்திய தலைவர் விராட் கோலி கூறும்போது, ‘தோல்வி ஏமாற்றம் அளித்தாலும் முகத்தில் சிரிப்பு இருக்கிறது. காரணம், நமது வீரர்கள் இந்த தொடரில் ஆடிய விதம்.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் எல்லா வகையிலும் எங்களை தோற்கடித்து விட்டது.

அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு சென்று விட வேண்டும்.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவுதான்என்றார்.

Related posts

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயங் அகர்வால்!

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலந்தர் ஓய்வு

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட்