வகைப்படுத்தப்படாத

வட மாகாண சபை பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படா நிலையில், பல்வேறு தரப்புடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் நேற்று இரவு 10.00 மணி வரையில் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலர் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த பேச்சு வார்த்தையில் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில். இன்றைய தினமும் அந்த பேச்சு வார்த்தை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை தமிழரசு கட்சியின் தவைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் மத தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

அதன்போது வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கொழும்பில் தங்கியிருந்த வடக்கு மாகாண ஆளுநர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாக உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் சீ,வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று ,அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், முதல்வருக்கு ஆதரவான கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பெற்றுள்ள அவர் முக்கிய அறிவிப்புகள் எவையேனையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

Showery and windy conditions to enhance until July 20

காலநிலை