(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் அனைத்து அமைச்சுக்களினாலும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 9.30 டுதல் 10.30 வரையான ஒரு மணித்தியால காலத்துக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதலாவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று மதியம் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் முன்றலில் இடம்பெற்றது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.