வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவா;களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தது.

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது.

Related posts

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

போர்த்துகலில் துக்க தினம் பிரகடனம்