வகைப்படுத்தப்படாத

சேதமடைந்த உட்கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்ததினால் சேதமடைந்த தேயிலைத் தோட்ட உட்கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்ககிரமசிங்க தெரிவத்துள்ளார்.

பதுரலிய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பிரதமர் நேற்று விஜயம் செய்தார். அதனைத் தொடர்ந்து பாலிந்தநுவர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

கிராமிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அது தேசிய பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்தும். எனவே இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த சிறு தேயிலை தோட்டங்களையும், வீதி வலைப்பின்னல்களையும் விரைவாக புனரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க விசேட வேலைத் திட்டம் அவசியம். சேதமடைந்த வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்றவற்றை துரிதமாக வழமை நிலைக்கு கொண்டு வருமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தேயிலை கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல வசதி ஏற்படுத்த வேண்டுமென அங்கு தெரிவித்த பிரதமர் இதற்காக இடர் நிலைமைகளால் சேதமடைந்த வீதி வலைப்பின்னல்களை துரிதமாக மீளமைக்கப்படுவதன் அவசியத்தையும் பிரதமர்; வலியுறுத்தினார்.

Related posts

ஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது

மருத்துவ தாதிமார்கள் இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில்

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்!