வணிகம்

பொருளாதார வளர்ச்சி 3.8 சதவீதமாக உயர்வு

(UDHAYAM, COLOMBO) – 2017ன் முதலாம் காலாண்டில் 3.8 சதவீதம் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2016ம் ஆண்டிலிருந்து நான்கு மாகாணங்களான வடக்கு, கிழக்கு, வட-மத்தி மற்றும் வட-மேற்கில் காணப்பட்ட கடும் வரட்சி நிலைமையால், முக்கியமாக நாட்டின் விவசாய நடவடிக்கைகள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

2016 முதலாம் காலாண்டில் ரூபா 2,082,544 மில்லியன்களாக காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதி 2017ன் முதலாம் காலாண்டில் ரூபா 2,161,770 மில்லியன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான: விவசாயம், கைத்தொழில், சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் நடப்பு விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமது பங்களிப்பினை முறையே 7.0 சதவீதம், 30.8 சதவீதம், 52.3 சதவீதம் மற்றும் 9.9 சதவீதமாக பங்களிப்பு செய்துள்ளது.

இந்த காலாண்டுப் பகுதியில், கைத்தொழில் நடவடிக்கைகள் உயர் வளர்ச்சி வீதமாக 6.3 சதவீதத்தை பதிவு செய்துள்ளதுடன் சேவைகள் நடவடிக்கைகள் 3.1 சதவீத வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளது. கடுமையான காலநிலை நிலைமையின் பாதிப்பினால் விவசாய நடவடிக்கைகளின் செயற்பாடு மேலும் சுருங்கியதுடன், 3.3 மறை சதவீத வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளது.

விவசாய துறையின் உப பிரிவுகளுக்கிடையில், ‘வாசனைத்திரவியங்களின் வளர்ச்சி’ 6.1 , ‘கால்நடை உற்பத்தி ‘ 6.9 , ‘காடாக்கலும் குத்திகளும்’ 9.3 மற்றும் கடல் மீன்பிடி 5.8 என்பன மிக உயர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளது.

இக்காலப் பகுதியில் ‘அரிசியின் வளர்ச்சி’ 53.1 சதவீதம் மற்றும் ‘எண்ணைப்பசை கொண்ட பழவகைகளின் வளர்ச்சி’ 10.2 சதவீதமாக கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பயிர்கள் வளரும் பிரதேசங்களில் காணப்பட்ட வரட்சியே இதற்கு காரணமாகும்.

இக்கால இடைவேளையில் ‘தேயிலை வளர்ச்சி’ 5.7 சதவீதம் மற்றும் ‘இறப்பர் வளர்ச்சி’ 17.2 சதவீதமாக வீழ்ச்சி வீதத்தை மேலும் எதிர்கொள்கிறமை குறிப்பிப்பிடத்தக்கது.  தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2017 முதலாம் காலாண்டுக்கான தேசிய கணக்குகள் மதிப்பிடலின் மேலதிக விபரங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.statistics.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

முகக்கவசங்களை சுகாதார அமைச்சுக்கு நன்கொடை வழங்கிய vivo

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்

SLT “Voice App”அறிமுகம்