வகைப்படுத்தப்படாத

தேசிய வீர விருது விழா

(UDHAYAM, COLOMB) – வீரப் பொதுமகன் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய வீர விருது வழங்கும் விழா சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 12 பேர் வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அரநாயக்க சாமசரகந்த மண்சரிவில் தமது உயிரைப் தியாகம் செய்து பலரை காப்பாற்றிய எரங்க விக்ரமசிங்க சார்பில் முதன்மை விருது வழங்கப்பட்டது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், தமது பாதுகாப்பை துச்சமென மதித்து பல உயிர்களை காப்பாற்ற உதவிய விஜய கமகே மகிலின்-நோனா என்ற பெண்மணிக்கும் பிரத்தியேக விருது கிடைத்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சபாநாகர்,

இந்த விருது வழங்கும் விழாவை வெற்றிகரமானதாக மாற்ற முப்படையினரும், பொலிஸாரும் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். சமீபத்திய இடர்நிலையின் போது மக்களை காப்பாற்றுவதற்காக உயிர் துறந்த விமானப்படை வீரரையும் இதன்போது அவர் பாராட்டினார்.

Related posts

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் செய்த காரியம்

Parliament to debate no-confidence motion against Govt. today

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து