வகைப்படுத்தப்படாத

மணித்தியாலத்தில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஹட்டன் ஆர்பாட்டத்தில் தொண்டமான் உறுதியையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது கடைகள் அடைப்பு போக்குவரத்தும் தடை

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைபகுதியில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை உடனடியாக அற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்

 

கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் டிக்கோயா நரசபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத நிலையில் நகரின் பலபகுதிகளிலும் தேங்கிக்கிடந்தது இந் நிலையில் 15.06.2017 காலை 9 மணிமுதல் ஹட்டன் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நகர வர்த்தகர்களினால் பாரிய ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

நகரின் பிரதான வீதியில் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றதுடன்   மணிக்கூண்டு சந்தியில் ஆர்பாட்டமொன்றும் இடம்பெற்றது அவ்விடத்திற்கு வருகைத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் மத்தியமாகாண தமி ழ் கல்வி.விவசாய.அமைச்சர் மருதபான்டி ராமேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஆகியோர் வருகைத்தந்த நிலையில் ஆர்பாட்டகாரர்கள் மத்தியின் உரையாற்றிய தொண்டமான்   ஒரு மணித்தியலயத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தற்காளிகமாக நுவரெலியா நகரசபைக்குற்பட்ட பத்தனை பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்

மேலும்  ஹட்டன் குடாகம பகுதியில் குப்பைகளை கொட்டுவது பெருத்தமற்றது அகவே ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிகளில்   சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டுவதற்கு இனம்கானப்பட்டுள்ள 5 ஏக்கர் அரச காணியை உடனடியாக பெற்றுக்கொடுப்பதுடன் குப்பபைகளினூடாக பசளை தயாரிக்கும் நிலைமும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் தொண்டமானின் உறுதிமொழியை அடுத்து 10.30 மணியளவில் ஆர்பாட்டம் கைவிடப்பட்டது  ஆர்பாட்டத்தில் ஹட்டன் நகரம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன் போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் முஇராமச்சந்திரன்

Related posts

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 160 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானம்

இம்யுனோகுளோபலின் விவகாரம் – உண்மையை உடைத்த விநியோகஸ்தர்

நாளை முதல் மழை குறைவடையலாம்