வகைப்படுத்தப்படாத

முன்பள்ளிக்கு முக்கியத்துவம் அமைச்சர் திகா – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – தோட்டப்பகுதிகளில் முன்பள்ளி நிலையங்கள் அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கும் அமைச்சர் திகாம்பரம் : சோ.ஸ்ரீதரன் பெருமிதம்

பெருந்தோட்டப்பகுதி முன்பள்ளி சிறுவர்களின் நலன் கருதி தோட்டப்பகுதிகளில் முன்பள்ளி நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு முன்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்ட என்சி பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்பள்ளி நிலையத்தைத் திறந்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பழனியாண்டியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் , அம்பகமுவ தொகுதி அமைப்பாளர் கல்யாணகுமார் , பொகவந்தலாவை மாவட்டச்செயலாளர் செல்வராஜ் , பிரிடோ நிறுவன இணைப்பாளர்களான கருணாகரன் , அமரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

சிறார்களின் அடிப்படை கல்விக்கு முன்பள்ளி கல்வி முக்கியமானதாகும். மூன்று வயதளவில் முன்பள்ளிக்குச் செல்லுகின்ற மாணவர்கள் அங்குக் கற்றுவிட்டு இரண்டு வருடத்துக்குப்பிறகு அரசாங்கப்பாடசாலையிலோ தனியார் பாடசாலையிலோ தமது ஆரம்பகல்வியை ஆரம்பிக்கின்ற போது அவர்கள்; எவ்விதமான அச்சமும் தயக்கமுமின்றி துணிவுடன் கல்வியைத் தொடரக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்த நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளைப் பொறுத்தவரையில் வசதிகளுடன் கூடிய முன்பள்ளிகள் குறைவாகவே உள்ளன. பிரிடோ போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் முன்பள்ளிகள் தோட்டப்பகுதிகளில் உள்ளன. ஆனால் அரசாங்க நிதியைக்கொண்டு தோட்டப்பகுதிகளில் முன்பள்ளி நிலையங்கள் கடந்த காலங்களில் அமைக்கப்படவில்லை. எனினும் அமைச்சர் பழனி திகாம்பரம் 2011 ஆம் ஆண்டு முதல் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலமாக தோட்டப்பகுதிளில் முன்பள்ளி நிலையங்களை அமைத்து வருகின்றார். இவரின் இந்தச்செயற்பாடு தோட்டப்பகுதிகளில் முன்பள்ளிக் கல்விக்கான ஊக்குவிப்பாக உள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/o.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/oo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ooo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/oooo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ooooo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/oooooo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/oooooooo.jpg”]

Related posts

Can Wesley upset Peterites?

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

ஜேர்மனிய தூதுவரை நாட்டில் இருந்து வெளியேற்ற தீர்மானம்…