வகைப்படுத்தப்படாத

நாளை மழை அதிகரிக்கும்

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென் மேற்கு பகுதி மற்றும் கிழக்கு ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை தற்பொழுதுள்ள மழை காலநிலை ஓரளவு அதிகரிக்கும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் கிழக்கு ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டதிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Related posts

இன்று 510 கைதிகளுக்கு விடுதலை

Strong winds to reduce over next few days

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தீ விபத்து!