வகைப்படுத்தப்படாத

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபியாவில் 15 வருடங்களுக்கு மேலாக சம்பளம் இன்றி பணியாற்றிய பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சர் தலதா அத்துகொரலவின் மத்தியஸ்தத்தினால் சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சு இதனை வழங்கியுள்ளது.

இலங்கை வரலாற்றில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு கிடைத்த உயர்ந்தபட்ச நிலுவைத் தொகை இதுவாகும்.

மட்டக்களப்பு ஏறாவூரை சேர்ந்த இந்தப் பெண் போலியான தகவல்களை வழங்கி சவுதி அரேபியா சென்றிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை

மின்னல் தாக்கியதில் பல வீடுகள் தீ பிடித்து எரிந்தது