வகைப்படுத்தப்படாத

மூன்று மாவட்டங்களில் இன்று மின் விநியோகம் தடை

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முதலான மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின்சார விநியோகத் தடையானது காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின் தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், வெற்றிலைக்கேணி உள்ளிட்ட மேலும் சில இடங்களில் மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் ஒரு பகுதி,  பாப்பாமோட்டை, பரப்பாங்கண்டல், வட்டக்கண்டல், குருவில் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும், வவுனியா மாவட்டத்தில் தெற்கு இலுப்பைக்குளம் பகுதியிலும் மின்சார விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

Warning issued for Filipinos seeking jobs in UAE

ஜோசப் ஜாக்சன் மரணம்

துருக்கியின் ஜனாதிபதியாக அர்தூகான் மீண்டும் தெரிவு