(UDHAYAM, COLOMBO) – கட்டார் நாட்டிற்கும் பிற வலைகுடா நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகள் ஒன்றுடன் ஒன்று பரிவர்தனை மேற்கொள்ளும் விதம் கடினமான மற்றும் கசப்பான நிலைக்கும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்டார் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு எதுவும் இல்லையெனவும் அங்கு தொழில்புரியும் இலங்கையர்கள் பாதிப்புக்கு முகம் கொடுக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கான இலங்கை தூதுவர் எஸ்.எஸ்.பி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையர்களின் தொழில்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமைய தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.
இதனுடன் பிரச்சினை ஏதும் காணப்பட்டால் தன்னை அழைக்குமாறு அவர் கூறியுள்ளார்.
தொலைபேசி இலக்கம்:.0097455564936