வகைப்படுத்தப்படாத

இன்னும் 3 வருடத்திற்குள் புதிய ஜனாதிபதி..?

(UDHAYAM, COLOMBO) – இன்னும்  3 வருடத்திற்குள் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஆட்சி காலம் இன்னும் 3 வருடங்களுக்கு மாத்திரமே தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய மகா சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறமுடியாமல் உள்ளது.

இந்தநிலையில், தாங்கள் செய்த அரசியல் மாற்றத்தினால் நாடு அழிவுறுமானால் தாம் உயிருடன் இருப்பதில் பலன் இல்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்கு தாம் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதாகவும் அத்துரலிய ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கண்டி-கண்டி மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

St. Peter’s rout Kingswood 53-12

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது