வகைப்படுத்தப்படாத

உண்மையான அர்த்தத்துடன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள காலம் கனிந்துள்ளது – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – பிற மதங்களையும்இ கலாசாரங்களையும் மதித்துஇ பௌத்த கோட்பாடுகளின் உண்மையான அர்த்தத்துடன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள காலம் கனிந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பொசொன்  தினத்தை முன்னிட்டு  விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பொசொன்  தினத்தைமுன்னிட்டு  விடுத்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு:
                                      கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் பொசொன் தினச் செய்தி
மஹிந்த தேரர் தலைமையிலான குழுவினரால் எமது தாய் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர சிந்தனை, அகிம்சை, அன்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தூய புத்தமதம் முழு தேசத்திலும் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
பௌத்த சமயக் கோட்பாடுகளினால் முழு இலங்கை மக்களையும் மும்மணிகளின் ஆசியை வேண்டிச் செல்லும் பக்திமிகு மக்களாக மாற்றியமைக்க முடிந்தது. அந்தப் புது உயிர்ப்பு மனித உள்ளங்களில் மாத்திரம் நின்று விடாது, ஆட்சி பீடம், இலக்கியக் கலைகள், விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் உட்பட முழு நாட்டிற்கும் பரவிச் சென்றது.
தூய தேரவாத புத்த மதத்தின் புகலிடமான எமது நாடு, படிப்படியாக அதன் கேந்திர நிலையமாக மாற்றமடைந்தது. உலகம் முழுவதும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக எம்மால் சிறந்த பணிகளை ஆற்ற முடிந்தமை மகிழச்சியான விடயமாகும். இம்முறை சர்வதேச வெசாக் தின வைபவம் மற்றும் உலக பௌத்த மாநாடு என்பன அதன் பிரதிபலனாகவே இலங்கையில்; நடைபெறுகின்றன.
அந்தப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல பௌத்த சமயக் கோட்பாடுகளின் உண்மையான உள்ளடக்கத்தைக் கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனைய மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, மானிடத்திற்கு மதிப்பளித்து, சகவாழ்வுடன் வாழும் இலட்சியத்தை யதார்த்தமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட இந்த பொசொன் போயா தினத்தில் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.
 
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்
 
2017.06.06

Related posts

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு

CID permitted to question IGP over lift incident

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு