வகைப்படுத்தப்படாத

மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழைத்தூறல் காணப்படும்.

தென் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ,மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசுக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Dr. Shafi produced before Court

Ten-month-old twins found murdered

பிரேசில் சிறை கலவரத்தில் 40 கைதிகள் உயிரிழப்பு