(UDHAYAM, COLOMBO)- இன்னொரு ஆட்டு மந்தை, கூட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு விட்டது .
வேட்டையாடப்படுகிற நாட்கள் அதற்கு எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது .
அந்த ஆடு வேறு யாருமே இல்லை கட்டார்தான் .
சம கால முஸ்லீம் உலகின் வேட்டை காவியத்தில் ,சதி காரர்கள் விரித்து வைத்துள்ள வலையை பறக்காமல் பிடித்து வைத்து கொண்டிருந்ததில் சவூதி அரேபியாவுக்கு அதன் அரபு கூட்டணிகளுக்கும் பெரும் பங்கு இருந்ததை யாருமே மறுப்பதற்கு இல்லை .
அந்த வரிசையில் உம்மாவின் வீழ்ச்சியிலும் வேட்டையிலும் பங்கு வகித்தில் எகிப்தின் இராணுவ ஆட்சியாளர் , ஜோர்தானிய மன்னர் , பஹ்ரைனில் ஆளும் குடும்பத்தினர் ,ஜக்கிய அரபு இராச்சிய இளவரசர்கள் ஆகியோரின் அளப்பரிய பங்கு வரலாற்றில் பித்தளை எழுத்துக்களால் பொறித்து வைக்க வேண்டிய ஒன்று .
பிராந்தியத்தை கூறு போட்டமை , ஈராக்கை நிர்மூலமாக்கி கொண்டிருப்பது ,சிரியாவை சிதைத்துக்கொண்டிருப்பது ,பலஸ்தீனத்தில் காஸாவின் கண்ணீருக்கும் படுகொலை வரலாற்றுக்கும் காரணமாக அமைந்தது , மேற்கு கரையின் அழுகைக்கு பிண்ணனியில் இருப்பது , லிபியாவின் இரத்த வரலாறுக்கு பக்க பலமாக இருந்தது , ஆப்கானை போர்களமாக்கி குளிர் காய்ந்தது,யேமனை பட்டினி போட்டு படுகொலை செய்து கொண்டிருக்கின்றமை,எகிப்தின் இரத்த வெள்ளத்துக்கு காரணமாக அமைந்தது என்பவை மேற்குறிப்பிட்ட அரபு கூட்டணியின் சம கால ,கடந்த கால சாதனைகள் .
மன்னர் ஆட்சியை பாதுகாக்க பேய்களோடும் கூட்டு சேருகிற நிலையில் அரபு கூட்டணிகள் தள்ளப்பட்டுள்ளமை கவலை அளிக்கின்றது .
சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு இஸ்ரேலுடனே நேரடி தொடர்பு இல்லாமல் இருப்பதாக வெளி உலகத்துக்கு காட்டப்படுகிற போதும் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள எகிப்து ஜோர்தான் பொன்ற நாடுகள் சவூதி அரேபியாவுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வருவதால் தீர்மானம் எடுப்பதில் சியோனிச சக்திகளின் பாதிப்பு அங்கு கடுமையானதாக இருக்கும்.
சமீபத்தில் ஹேக்கர்ஸ் வெளியிட்ட இரகசிய தகவல்களில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இஸ்ரேளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் கட்டாரின் பிராந்திய செல்வாக்கை தகர்க்க அது தீட்டிய திட்டங்களும் கையும் களவுமாக வெளி வந்தது .
ஆக மொத்ததில் அரபு கூட்டணியை ஆசனங்களை பாதுகாக்க அவர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பது சியோனிச சக்திகள் என்பது தெளிவாகிறது .
முஸ்லிம் நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாய் நிர்மூலம் ஆக்குவது என்பது சியோனிஸத்தின் கனவு .அந்த கனவின் நனவுகளான நாடுகள் ,ஈராக் ,ஆப்கானிஸ்தான் ,சிரியா , யெமன் லிபியா .
இப்போது அது கண் வைத்திருப்பது கட்டாரை ..
பொருளதார ரீதியான முன்னேற்றம் கண்டுள்ள ,முஸ்லிம் தனிப்பெரும் ஊடகம் ஒன்றை உருவாக்கி உள்ள, உலகத்தின் முதலாவது பணக்கார நாடான கட்டார் சியோனிசத்தின் கண்களை நீண்ட நாட்களாகவே குத்தி வந்தது .
அல்ஜெஸீராவின் வளர்ச்சி சியோனிஸத்துக்கு தலை வலியை கொடுத்துக்கொண்டிருக்கிறது . கட்டாரின் பொருளாதாரம் நாடு கடந்து முதலிட்டுக்கொண்டிருப்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் பண ரீதியாக சியோனிஸம் காட்டி வருகின்ற செல்வாக்கை எதிர்காலத்தில் ஆட்டம் காண வைக்கும் என்கிற அச்சம் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தி இருந்தது .
இஸ்லாமிய போராட்டத்துக்கோ அல்லது முஸ்லீம் போராட்ட அமைப்புகளுக்கு அனுசரணை வழங்கும் எவருமே எதிரிகள் என்கிற ‘போமியூலா’ கட்டாரையும் விட்டு வைக்கவில்லை . பலஸ்தீன போராட்டத்துக்கு அணுசரனை வழங்கிய சதாம் ஹுசைன் தீர்த்துக்கட்டப்பட்டார் , ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் அளித்த தாலிபன் மீது படைப்பிரயோகம் செய்யப்பட்டது . முற்போக்கு தனமாக செயற்பட்ட லிபியாவின் கடாபி வீதியில் வைத்து வேட்டையாடப்பட்டார் , ஹமாஸுக்கு ஆதரவு அளித்த எகிப்திய இஹ்வான்கள் ஆட்சியில் இருந்து கிள்ளி எறியப்பட்டார்கள் .
அந்த வகையில் இப்போது ஹமாஸுக்கும் இஹ்வான்களுக்கும் சிரியாவின் போராட்ட குழுக்களுக்கும் ஆதரவு அளிக்கும் கட்டார் மீது சியோனிச துப்பாக்கிகள் திருப்பப்பட்டுள்ளன ..
சியோனிசத்துக்கு மாத்திரம் அல்ல அரபு கூட்டணிக்கும் கட்டாரின் வளர்ச்சி எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது . ஏற்கனேவே எகிப்திய இஹ்வான்களுக்கு ஆதரவு கொடுத்தமை ,சவூதிக்கு பிடிக்காத ஹமாஸூக்கு அணுசரனை வழங்கி வருகின்றமை , ஈரானுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை
சிரியாவில் போராடி வரும் ஆயுத போராட்ட குழுக்களுக்கு உதவி செய்து வருகின்றமை, பிராந்தியத்தில் பொருளதார பலமாக உருவெடுத்தமை
ஆகியன பிராந்தியத்தில் தமது மன்னர் ஆசனங்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அரபு கூட்டணிகளும் எண்ணின.
ஆக மொத்ததில் சியோனிச ,அரபு கூட்டணிகளின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது . கட்டார் என்கிற நாட்டை இலக்கு வைக்க வேண்டும் என்று தீட்டப்பட்ட திட்டத்தின் வெளிப்பாடுதான் கட்டாருக்கு எதிரான இந்த இராஜ தந்திர நெருக்கடி .
சியோனிசத்தின் கைக்கூலிகளாக இருக்கும் இந்த அரபு கூட்டணிகளுக்கு பல இமாம்கள் பள்ளிவாசல்களுக்குள் வக்காலத்து வாங்குவது கவலைக்குரிய விடயம்
கட்டாருக்கு நெருக்குதல் அளிக்க ,அதை நிர்மூலமாக்க அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பை விட ‘புத்திசாலியான ‘ ஜனாதிபதி கிடைக்க மாட்டார் என்பதை அறிந்து கொண்டுள்ள சியோனிஸமும் முட்டாள் ஆட்சியில் இருக்கும் போதே பட்டாசு போட திட்டம் தீட்டி விட்டது .
இதன் முதல் கட்டமாகவே கட்டார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது .அதன் பொருளாதாரம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது . அதன் மீது வருங்காலத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ..
ஆக மொத்ததில் ஆட்டு மந்தைகளை வேட்டையாட குள்ள நரி பயன்படுத்துகிற தந்திரம் பிரித்தபின் ஒன்றன் பின் ஒன்றாக கொல்வது .ஆட்டுக்கூட்டத்தில் உள்ள சில முனாஃபிக்குகள் ஆடுகளை தாரை வார்ப்பதுதான் கவலைக்குரிய விடயம் .
யா அல்லாஹ் இந்த அரசியல் நெருக்கடி மூலமாக உம்மாவுக்கு புரட்சிகரமான மாற்றம் ஒன்றை தந்து உம்மாவின் அழுகையையும் ,ஒப்பாரியையும் நிறுத்தி
குள்ள நரிகளுக்கு எதிராக எம்மை ஒன்று சேர்ப்பாயாக .
By – Muhammadu Raaji
(Courtesy – MN.com)