(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வழிகாட்டலில் இந்த மூன்று மாத கால வேலைத்திட்டம் நேற்று(01) முதல் ஆரம்பிக்கப்பட்டது.
மூன்று மாத காலத்துக்கான வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சும் ஜனாதிபதி செயலணியும் இணைந்து முன்னெடுத்துள்ளன.
வெள்ளம் வடிந்தோடும் நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதினால்; அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக நீர் நிரம்பியுள்ள பிரதேசங்களில் சேர்ந்துள்ள கழிவுகளை வீதிகளில் எறியாது அவற்றை முறைப்படி அப்புறப்படுத்துமாறும் பொதுமக்களை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதுவரையில் 53 ஆயிரம் டெங்கு நோயாளர்; அடையாளங்காணப்பட்டுள்ளனர். 150 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே அனர்த்தத்தால் உயிரிழந்துள்ளனர்.