(UDHAYAM, COLOMBO) – இடர் நிவாரண சேவைகளுக்காக மூன்று நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஏழு கப்பல்கள் இலங்கையை அடைந்துள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் ,வற்றில் அடங்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. சில கப்பல்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் சமகால இடர் நிலைமையை கருத்திற் கொண்டு துரிதமாக செயற்பட்ட இந்திய கடற்படை மூன்று கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது. இந்தக் கப்பல்கள் மூலம் ,லங்கை வந்த மருத்துவ, உயிர்காப்பு, சுழியோடி குழுக்கள், கடற்படையுடன் ,ணைந்து மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் மூலம் சிறிய படகுகளும், உலர் உணவு நிவாரணங்களும், குடிநீர் போத்தல்களும், மருந்து வகைகளும் பெருமளவில் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் சுல்பிகார் கப்பல் மூலம் ,லங்கை வந்த மருத்துவர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சீனாவும் நிவாரண பணிகளுக்காக மூன்று கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அவுஸ்திரேலிய அராங்கமும் ஐந்து படகுகளுடன் வெளியிணைப்பு மோட்டார் இயந்திரங்களையும், குழுவொன்றையும் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.