வகைப்படுத்தப்படாத

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பொருத்தமற்ற கட்டடங்கள் அகற்றப்பட்டு புதியகட்டங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டடத்தின் நிலைமையை பரிசோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அந்த பிரதேசங்களிற்கு அனுப்பிவைக்கபட்டு பாடசாலையின் நிலைமை பரிசோதிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடி

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்