(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்தில் விசேட சர்வமத நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இதில் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்று கருதி, கிளிநொச்சி காவற்துறையினரால் நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மக்களின் ஆர்ப்பாட்டம் நடத்தும் சுதந்திரத்தை மதிப்பதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்களது ஆர்ப்பாட்டம் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் கடிதம், போராட்டம் இடம்பெறும் பகுதியில் காவற்துறையினரால் ஒட்டப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.