விளையாட்டு

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார்.

அமெரிக்காவின் ஒரெகன் பிராந்தியித்தில் இடம்பெற்றுவரும் டயமன் லீக் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

34 வயதான பிரித்தானிய வீரரான ஃபரஹ் ஐந்தாயிரம் மீற்றர் தூரத்தை 13 நிமிடங்கள் மற்றும் 0.70 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் எத்தியோப்பிய வீரரான யொமிப்ஃ கெஜெச்சா இரண்டாம் இடத்தையும், கென்ய வீரரான ஜியொபஃரி கம்வோரர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரான போல் செலிமோ ஏழாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடரிலிருந்து தனுஷ்க விலகல்

இலங்கை – பங்களாதேஷ் ரெஸ்ட் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்