உலகம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில், ஏப்.30 அதிகாலை 1 மணியளவில் (இலங்கை நேரப்படி ஏப்.29, மாலை 6.30 மணியளவில்) 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் அங்கு லேசான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்வாய்ப்பாக மிகப் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Related posts

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’

புட்டினுக்கும் – சீன ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்