ஆப்கானிஸ்தானில் இன்று சனிக்கிழமை (19) நண்பகல் 12:17 மணியளவில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் சில குலுங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.