உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!

சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதோடு, மரணமடைந்தவர் சம்மாந்துறை, சென்னல்கிராமம் 02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைக்கைதிகளை பார்வையிட தடை

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானது