பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தந்ததற்கு இலங்கையின் முக்கிய பௌத்த துறவியான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆதரவைப் பாராட்டியுள்ள அவர் “இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், இந்தியா ஒரு குடும்ப உறுப்பினரைப் போல எழுந்து நிற்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
பௌத்த மதத்தினருக்கு புனிதத் தலமாக அனுராதபுரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் குறிப்பாக 2,300 ஆண்டுகள் பழமையான போதி மரம் அங்கிருப்பது பற்றியும் தெளிவு படுத்தினார்.
“பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இங்கு வருகை தந்தார். அவர் இங்கு வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
2300 ஆண்டுகள் பழமையான போதி மரத்திற்காக அனுராதபுரம் மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இலங்கையில் பௌத்தம் தொடங்கிய இடம் இது” என்று அவர் கூறினார்.
“இங்குள்ள ஸ்தூபத்தில் புத்தரின் நினைவுச்சின்னங்கள் இருக்கிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பௌத்தம் இந்தியா இலங்கைக்கு வழங்கும் மிகப்பெரிய பரிசு.
இலங்கை பிரச்சினையில் சிக்கிய போதெல்லாம் இந்தியா ஒரு குடும்பத்தைப் போல எழுந்து நிற்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
பிரதம சங்கநாயக் தேரரான பல்லேகம ஹேமரதன தேரர் 2022 இல் ருவன்வெளி மகா சேயாவின் அடமஸ்தானாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் இலங்கையின் 11 ஆவது அடமஸ்தானாதிபதியாவார்.
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்.
ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் கடல் பாலமான தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார்.