உலகம்

நாளை விண்வெளிக்கு பயணமாகும் அமெரிக்க பாடகி

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் மற்றும் அமேசன் நிறுவனர் ஜெப் பெசாசின் வருங்கால மனைவியும், செய்தி தொகுப்பாளருமான லாரன் சான்செஸ் என மொத்தம் 6 பெண்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கப்பட்ட தொழிலதிபர் ஜெப் பெசாசின் ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘நியூ ஷெப்பார்டு’ விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

இந்த விண்கலம் நாளை (14) வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

Related posts

Pfizer இற்கு தடுப்பூசிக்கு எதிராக வழக்கு

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு

காசா போருக்கு எதிராக ஜோர்டான், துருக்கி, துனீசியாவில் வெடித்த போராட்டங்கள்!