உள்நாடு

துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் ஒரு பயணியை இறக்கி விடுவதற்காக வந்த இந்த தொழிலதிபரே முனையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ சார்ஜென்ட் ஒருவரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

ரயில் சேவைகள் மந்தகதியில்

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்