உள்நாடு

பூஸா சிறையில் கொல்லப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதியின் உடல் இன்று (05) காலி கராபிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து ரத்கம பொலிஸாரும் விசாரணையகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க கூறுகையில், நேற்று அதிகாலை கைதி காயமடைந்து அவரது அறையில் கிடந்தார்.

பின்னர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

ஹெராயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 46 வயதான அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகளிடமிருந்து தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

கடும் மழையால் திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

editor

ஊரு ஜுவாவின் உறவினர் கைது