உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !