உலகம்

ட்ரம்பின் அறிவிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு!

உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஆயுத பலத்தாலும், டொலர் பலத்தாலும், வியாபார முதலிடூகளாலும் அமெரிக்கா பல்வேறு ராஜதந்திரங்களை அவ்வப்போது வகுத்து திணித்து வருகிறது.

அதற்கேற்ப நேற்றிரவு அதிரடியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் டொனால்ட் ட்றம்ப் மற்றும் எலொன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வரி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பொருட்களுக்கு 44% வீத வரி திணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி மூலம் இலங்கையின் சுமார் 2 மில்லியன் மாத வருமானத்திற்கு பெரும் பங்கம் பாதிப்பு ஏற்படக்கூடும்.

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை இலங்கை அதிகம் பின்தொடர்வதால் அதனை தடுக்கும் வகையில் இந்த வரி அமுல்படுத்தப்பட்டிருக்க கூடுமென நம்பலாம்.

வரியை குறைப்பதற்கு இலங்கை அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும், அப்போது அமெரிக்காவின் கண்டிசன்களை பின்பற்ற நேரிடும்.

அந்த கண்டிசன்களில் சீனா ரஸ்யா ஈரான் இந்தியா விவகாரங்களும் உள்வாங்கப்பட்டிருக்கும்.

இதுவே அமெரிக்காவின் இந்த வரி திட்டத்தின் ராஜதந்திரமாகும்.

மொத்தத்தில் அமெரிக்கா தனது ஆயுத பலத்தையும், டொலர் பலத்தையும், வியாபார பலத்தையும் தக்க வைத்துக்கொள்ள #எதை வேண்டுமானாலும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும், எந்த நாட்டில் வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்காது என்பதற்கு இவை சாட்சியாகும்.

இந்த சங்கடத்தை இலங்கையின் புதிய அரசு எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related posts

இந்தியா – சவூதி முறுகல் நிலையில் உக்கிரம்?

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது