உலகம்

நித்தியானந்தா சுவாமிகள் இறந்து விட்டதாக தகவல்?

பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார்.

காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாகவும் அவர் காணொளி வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைதுசெய்து நாடு கடத்த பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அவர் இருக்கும் இடம் இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா, தலைமறைவாகியிருந்த நிலையில், இந்துக்களுக்கான நாடு என்ற பெயரில் திடீரென கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கினார்.

இந்த நாட்டுக்கு என தனி நாணயம், கடவுச்சீட்டு, தனிக் கொடி உள்ளிட்டவைகளையும் அவர் நிர்மாணித்தார்.

மேலும், தனது நாட்டில் தொழில் தொடங்குமாறும் அவர் தமிழகத்திலுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என கூறப்பட்ட நிலையில், திடீரென காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கைலாசாவில் இருந்து மறுப்பு எதுவும் வரவில்லை.

Related posts

50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்

editor

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்

28 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்