அரசியல்உள்நாடு

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது – நாங்கள் இன்னும் IMF நிபந்தனைகளுடன் இருக்கிறோம் – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.

இன்று (01) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் இப்போதைக்கு அதை செய்ய வழியில்லை. ஏனென்றால், நாங்கள் இன்னும் IMF நிபந்தனைகளுடன் இருக்கிறோம்.

எங்கள் வருமானத்தையும் செலவையும் ஆராய வேண்டியிருக்கிறது. அரசாங்கத்திற்கு வருமானம் இருக்க வேண்டும், ஒரேயடியாக விலையை குறைப்பது கடினம்.

நாங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்திய பிரதமர் இங்கு வரும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாகன ஒப்பந்தங்களை நோக்கியே செல்லவுள்ளோம்.

அப்படி சென்றுதான் எங்களால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். எரிபொருளுடனும் எங்களுக்கு ஒரு சமநிலைப்படுத்தல் செய்ய வேண்டியிருக்கிறது. இதை IMF-ம் அறிந்திருக்கிறது.

ஒரேயடியாக அந்த இடத்திற்கு செல்ல முடியாது. ஆனாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் பலமுறை எரிபொருள் விலையை குறைத்திருக்கிறோம்.

இந்த முறை 10 ரூபாயால் குறைத்திருந்தாலும், இதற்கு முன்பும் அரசாங்கம் பல்வேறு அளவுகளில் விலையை குறைத்துள்ளது.” என்றார்

Related posts

சஜித் தனித்து செல்ல விரும்பினாலும் நாம் இணைந்து பயணிப்பதற்கே விரும்புகின்றோம் – நவீன் திஸாநாயக்க

editor

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன