அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

Google செயலிழந்தது

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் – அங்கஜன் எம்.பி

editor

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்