உள்நாடு

பாலஸ்தீனில் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்காக துஆ செய்வோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தேசிய ஷூரா சபை

தேசிய ஷூரா சபையின் ஈதுல் பித்ர் செய்தி

பாக்கியங்கள் பலவற்றை சுமந்து எம்மை நோக்கி வந்த ரமழானுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டோம்.

களிப்போடும் சந்தோஷத்தோடும் இத்தினத்தை கடத்தும் அதே நேரம் இந்த மகத்தான மாதத்தை தந்தமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஒரு மாதமாக மிகவும் சிரமப்பட்டுப் பெற்ற பயிற்சியை தொடர்ந்து வரும் காலங்களிலும் அமுல் நடத்த வேண்டும்.

ஈகைத் திருநாள் எனப்படும் இந்த நாளில் வறுமையோடும் கஷ்டங்களோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையோருக்கு உதவிகளை செய்வதோடு பெற்றார், உற்றார் உறவினர்களை சேர்ந்து நடக்க வேண்டும். வகைகளை மறந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச ரீதியாக பொதுவாக பல முஸ்லிம் நாடுகளிலும் குறிப்பாக பாலஸ்தீனிலும் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களை நினைத்து அவர்களுக்காக துஆச் செய்வதுடன் பிற சமூகங்களுடன் நாம் வாழும் இந்த நாட்டில் எமது பெருநாள் சந்தோஷத்தை மிகக் கவனமாக வெளிப்படுத்த வேண்டும்.

சவால்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் எமது காரியங்கள் அனைத்தையும் கலந்தாலோசனையின் அடிப்படையிலும் பரஸ்பர புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் தூர நோக்கோடும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேசிய சூரா சபையின் பிரதான குறிக்கோள்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

வல்லவன் அல்லாஹ் எம் அனைவரது நற்கருமங்களையும் அங்கீகரித்து பாவங்களையும் மன்னிப்பானாக!

ஊடகப் பிரிவு
தேசிய ஷூரா சபை
31.03.2025

Related posts

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு

கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்பவும்

பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு