உள்நாடுபிராந்தியம்

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சிகுளம் சந்திக்கு அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரப்பனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (26) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திரப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வலுக்கும் கொரோனா

ஹோமாகம பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு : விசாரணைகள் CID இடம்

பாரிய கற்கள் புரள்வு : போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]