வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (26) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், விமான விபத்து தொடர்பான குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், விமான விபத்து விமானியின் தவறால் ஏற்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தெரிவித்த கருத்து பொருத்தமானதா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், விமானம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், விமான விபத்து தொடர்பான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.