இரத்தினபுரி புதிய நகரில் நூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நகர பூங்காவின் நிர்மாணப்பணிகள் சிறந்த தரத்தின் கீழ் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டுமென சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுவரும் நகர பூங்காவின் நிர்மாணப்பணிகளை சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன நேற்றைய தினம் (25) நேரடியாக சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மேற்படி நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதன் திட்டமிடல் மற்றும் மேற்பார்வை சேவைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மாகாண பொறியியல் சேவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான முழு தொழிலாளர் பங்களிப்பும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளது.
உயர்ந்த தரத்திலான நான்கு உணவகங்கள், சுகாதார அமைப்பு ,
சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி நிலையம் ஆகியவை இரத்தினபுரி புதிய நகர பூங்காவில் இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி