வகைப்படுத்தப்படாத

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் அனுதாபம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/modi_twitter.png”]

முதலாவது கப்பல் நேற்று (26) காலையும் இரண்டாவது கப்பல் இன்று இந்தியாவிலிருந்து புறப்படும் என்றும் இந்தியப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/twitter.jpg”]

Related posts

கேரளாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்