அரசியல்உள்நாடு

வேட்பு மனு நிராகரிப்பு வழக்குகளில் வேறு கட்சிகளுக்காக முன்னிலையாக மாட்டேன் – சுமந்திரன்

இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (20) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில் வழக்கு தொடர தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்கு தொடர தாங்கள் தயாரா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

நான் ஒரு கட்சியின் செயலாளராக உள்ளமையால் , வேறு கட்சிகளுக்காக இந்த வழக்குகளில் முன்னிலையாக மாட்டேன் என கூறினார்.

Related posts

கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க Paris Club உறுதி

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor

தர்ஷன் தர்மராஜ் : விடைபெற ஏன் அவசரம் [VIDEO]