உள்நாடு

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் சொகுசு கார் மோதி விபத்து

களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், பாதுக்கை, லியன்வல, துத்திரிபிட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான சொகுசு கார் ரயில் கடவைக்குள் நுழைய முயன்ற போது ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் கடவையில் கடமையில் இருந்த நபர் விபத்து நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இல்லை என்றும், எனவே பாதுகாப்பு கடவை மூடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான காரின் சாரதி பாதுக்கை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய ரயில், காலையில் களனிவௌி ரயில் மார்க்கத்தில் பயணித்த இறுதி ரயில் என்றும், ரயில் இயந்திரம் மீண்டும் இயங்காததால் விபத்துக்குப் பிறகு ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும் பாதுக்கை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

‘சட்டம் ஒழுங்கை அமல்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது’

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷர் எம்மை விட்டும் பிரிந்தார் – சஜித்

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

editor