உள்நாடுபிராந்தியம்

நிலாவெளியில் முச்சக்கர வண்டியும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனமும் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!

முஸ்லிம் திருமண வயதெல்லை – அனுர அரசிலும் சர்ச்சை | வீடியோ

editor

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு