அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று (17) அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.